விரதங்கள்
*வராஹ புராணம் - பகுதி 21
விரதங்கள்
=========
1. சித்திரை - சுத்த (வளர்பிறை) துவாதசியில் வாமனனாகிய நாராயணனை பூசிக்க வேண்டும்.
2. வைகாசி - வளர்பிறை துவாதசி. பரசுராம துவாதசி. பரசுராமரை (நாராயணனை) பூசிக்க வேண்டும்.
3. ஆனி - வளர்பிறை துவாதசி - ஸ்ரீராம துவாதசி - ஸ்ரீ ராமாவதார விஷ்ணு பூஜை.
4. ஆடி - வளர்பிறை துவாதசி. கிருஷ்ண துவாதசி - ஸ்ரீ கிருஷ்ணனைப் பூசிக்க வேண்டும்.
5. ஆவணி - வளர்பிறை துவாதசி. புத்த துவாதசி - ஆபத்திலிருந்து நிவாரணம் பெற இவ்விரதம் செய்யப்படும்.
6. புரட்டாசி - வளர்பிறை துவாதசி - கல்கி துவாதசி - கல்கி அவதார விஷ்ணு பூசை.
7. ஐப்பசி - வளர்பிறை துவாதசி - பத்மநாப சுவாமியைப் பூசித்தல்.
8. கார்த்திகை - வளர்பிறை துவாதசி. விஷ்ணு பிரீதிக்கான வழிபாடு. இது பதிதபாவன தரணி துவாதசி. வராகம் பூமியை ரக்ஷித்தது.
9. மார்கழி - வளர்பிறை துவாதசி - மச்ச துவாதசி - மச்சாவதார நாராயணன் பூஜை.
10. தை - வளர்பிறை துவாதசி. கூர்ம துவாதசி - கூர்மாவதார விஷ்ணு பூஜை.
11. மாசி - வளர்பிறை துவாதசி - சர்வபாப விமோசனம் - வராக மூர்த்தி பூஜை.
12. பங்குனி - வளர்பிறை துவாதசி - நரசிம்ம துவாதசி. நரசிம்மர் பூஜை.
காந்தி விரதம் : கார்த்திகை துவிதியை திதியில் வளர்பிறையில் செய்யப்படுவது. கிருஷ்ணன் (அ) பலராமனைப் பூசித்து வெள்ளி சந்திரன் பதுமைகளைத் தானம் செய்தல்.
அவிக்கின விரதம் : திரிபுரசுரர்களைக் கொல்வதற்கும் முன் சிவபெருமானும், கடலை ஆசமனம் செய்வதற்கு முன் அகஸ்தியரும் இந்த விரதத்தை அனுஷ்டித்தனர். விரதத்தின் பகுதியாகப் பங்குனி மாதம் சதுர்த்தசி திதி அன்று கணேசன் மீது மந்திர உச்சாடனம் செய்வது நலம்.
காம விரதம் : தை மாதம் சுக்கில பக்ஷ பஞ்சமி திதியில் கந்தன் வழிபாடு சிறப்புடையது. முதன்முதலில் இதனை நளன் அனுஷ்டித்தான்.
சாந்தி விரதம் : கார்த்திகை சுக்கில பக்ஷ பஞ்சமி திதியில் சாந்திவிரதம் அனுஷ்டிக்க வேண்டும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி சாந்தி ஏற்படும். ஓர் ஆண்டுக்கு சூடான உணவைத் தவிர்க்க வேண்டும். முடிவில் சேஷன் பாம்பு வடிவ பிரதிமையை தானம் கொடுக்க வேண்டும்.
ஆரோக்கிய விரதம் : ஆரோக்கிய விரதத்தின் மூலம் மன்னன் அனரண்யன் பெற்ற சாபத்தால் ஏற்பட்ட தொழுநோய் நீங்கியது.
புத்ரேஷி விரதம் : சூரசேன மன்னனுக்குப் புத்திர பாக்கியம் அளித்த விரதம் இது. யசோதை மடியில் தவழும் கிருஷ்ணனைத் தியானித்துப் பாலும், தயிரும் தானமாகத் தரவேண்டும்.
தொடரும்...
ஓம் நமோ வராஹாய!
🌸🌸🌸🌸🌸🌸🌸
"முன்ஜென்ம கர்ம, பாவ வினைகளால் உண்டாகும் தடைகள், தோஷங்கள்,
பிணிகள், கவலைகள் நீங்கி தெய்வ திருவருள் பெறுவதற்கு வழிபாடுகள்,
விரதங்கள் பெரிதும் துணை புரிகின்றன. ஆயுள், ஆரோக்யம், புத்திர சம்பத்து,
மாங்கல்ய பலம், சவுபாக்ய யோகம் கிடைக்கவும் மன அமைதி,
சந்தோஷம் ஏற்படவும் பூஜை, புனஸ்காரங்கள் இருக்கின்றன.
அந்த வகையில் செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள்
வேண்டி செய்யும் விரத பூஜையே வரலட்சுமி பூஜை அல்லது வரலட்சுமி
நோன்பாகும். வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை ஞானமும், நலனும்,
வளமும் விரதங்களால் கிடைக்கின்றன என்று புராணங்கள் கூறுகின்றன
🌸🌸🌸🌸🌸
சிவனுக்கு உகந்த 8 விரதங்கள்
சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரண அருளைப் பெறலாம்.
சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரண அருளைப் பெறலாம்.
1. சோமவார விரதம் - திங்கள் கிழமைகளில் இருப்பது
2. உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது
3. திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் வருவது
4. சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது
5. கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
6. பாசுபத விரதம் - தைப்பூச தினத்தில் வருவது
7. அஷ்டமி விரதம் - வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது
8. கேதார கவுரி விரதம் - ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்....
🌸🌸🌸🌸
விநாயகருக்குரிய 11 விரதங்கள்
1.வெள்ளிக்கிழமை விரதம்
2. செவ்வாய்க்கிழமை விரதம்
3. சதுர்த்தி விரதம்
4. குமார சஷ்டி விரதம்
5. தூர்வா கணபதி விரதம்
6. சித்தி விநாயகர் விரதம்
7.துர்வாஷ்டமி விரதம்
8. நவராத்திரி விரதம்
9.வெள்ளிப்பிள்ளையார் விரதம்
10. செவ்வாய்ப்பிள்ளையார் விரதம்
11. சங்கட ஹர சதுர்த்தி விரதம்
இவ்விரதங்களில் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி
விரதம் மிகவும் முக்கியமானதாகும்.
விநாயகர் துதி
மந்திரம்
ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விநாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம
🌸🌸🌸🌸
#திருமண #தடைகளை #விலக்கும் #ஆடி #மாத #விரதங்கள் :
ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும். எந்த விரதம் என்ன பலனை தரும் என்று பார்க்கலாம்
🌸🌸🌸🌸
கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம் ஆகும். திங்கட்கிழமை தோறும் இந்த விழா கடைப்பிடிக்கப்படும். "சோமன்" என்றால் உமையுடன் கூடிய சிவன் என்று பொருள்படும். அத்தோடு சந்திரன் என்ற பொருளும் உண்டு.
சிவ விரதங்களுள் சோமவார விரதமும் மிக மேலானதாகும். சந்திரனுக்குரிய தினம் திங்கள். எனவே திங்கட்கிழமை சோமவாரம் என அழைக்கப்படுகிறது. கிருதயுகம் தோன்றியதும் சந்திரன் சிவபெருமானின் முடியில் அமரும் பேற்றினைப் பெற்றதும் கார்த்திகை சோமவாரத்திலே தான். எனவே இம்மாதத்து திங்கட்கிழமை முக்கியத்துவம் பெறுகின்றது.*
சிவாலயங்களில் சங்காபிஷேகம் நிகழ்த்தப்படும் நன்னாள். சங்குகளைக் கொண்டு கார்த்திகை மாதத்தின் முதல் அல்லது மூன்றாவது அல்லது கடைசி சோமவாரத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்வது தொன்று தொட்டு நடந்து வரும் வைபவமாகும். கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். அவரைக் குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள்.
இறைவன் தன் அருளால் மனிதனை வயப்படுத்துகிறான்; மனிதனும் தன் பக்தியால் இறைவனைக் கட்டுப்படுத்துகிறான். அந்த பக்தி வகைகளில் ஒன்று தான் சங்காபிஷேகம். சிவன் அபிஷேகப்பிரியர். அதிலும் சங்கினால் அவருக்கு அபிஷேகம் செய்தால், இந்த கங்கை சடைமுடியான், பக்தனுக்குப் பரமானந்தம் வழங்குவார். கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்கில் புனித நீர் நிரப்பி, அந்தத் தீர்த்தத்தை கங்கையாகப் பாவித்து சங்காபிஷேகம் செய்வது வழக்கம். சங்கு, செல்வத்தின் சின்னம். வற்றாத பொருள் செல்வம் வேண்டும் இல்லறத்தாரும், இறைவனின் அருட்செல்வம் வேண்டும் துறவிகளும், இந்தப் பூஜையை மேற்கொள்கிறார்கள்.
அனைத்து சிவாலயங்களிலும் கார்த்திகை சோமவார சங்காபிஷேகமும் ஆராதனைகளும் சிறப்பாக செய்யப்படுகின்றன. சோமவாரத்தில் நிகழும் சங்காபிஷேகத்தைத் தரிசித்தால் ஆயுள் விருத்தி உண்டாகும். தீராத நோய்கள் தீரும் என்பர் - ஆன்றோர். இல்லறத்தில் கணவனும், மனைவியும் ஒற்றுமையுடன் விளங்கவும், இல்லத்தில் பிள்ளைகளுடன் சுற்றம் சூழ தீர்க்காயுளுடனும் நல்வாழ்வு வாழவும் இந்த சங்காபிஷேக வழிபாட்டினைச் செய்யலாம்.
🌸🌸🌸🌸🌸
பலன் தரும் கிழமை விரதங்கள்.
வாரத்தின் துவக்கம் திங்கள் கிழமை முதல் ஞாயிற்று கிழமை வரை பலவிதமான விரதங்களை நாம் கடைபிடிக்கின்றோம். இதில் ஒவ்வொரு கிழமையும் கடைபிடிக்க வேண்டிய விரதங்களும், கடைபிடிக்கும் வழிமுறைகளையும் பார்க்கலாம்.
ஞாயிற்றுக்கிழமை:
ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உகந்தது. சூரிய நமஸ்காரம் செய்யலாம். ஆதித்யஹருதிய ஸ்தோத்திரம் சொல்லலாம். சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து சூரியனுக்கு படைக்கலாம். காளிதேவிக்கு விரதமிருந்து எலுமிச்சை விளக்கேற்றிட எல்லா துன்பங்களும்,கண்திருஷ்டியும் நீங்கும்.
திங்கட்கிழமை:
திங்கள் கிழமை சோம வார விரதம் ஆகும். சிவபெருமானுக்கு உகந்த இந்த விரதத்தை கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தில் அனுஷ்டிக்க வேண்டும். சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
செவ்வாய்க் கிழமை :
செவ்வரளி மாலை கொண்டு திருசெந்தூரணை வழிபட்டு விரதம் இருக்க நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க் கிழமை அங்காரகனை வேண்டி விரதம் இருக்க நல்ல பலன் கிடைக்கும்.
புதன்கிழமை:
புதனுக்குரிய தெய்வம் பெருமாள். அன்றைய தினம் விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து விரதம் இருந்தால் கல்வி, ஞானம் பெருகும்.புதன்கிழமை விரதம் புகழைக்கொடுக்கும்.
வியாழக்கிழமை:
குரு பகவானுக்குரிய நாள் வியாழக்கிழமை. அந்த நாளில் விரதம் இருந்தால் எல்லா காரியங்களும் கைகூடும்.தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை, மஞ்சள் வஸ்திரம், புஷ்பம் சாற்றி வழிபட வேண்டும்.
வெள்ளிக்கிழமை:
வெள்ளிக்கிழமை விரதம் சுக்கிரனுக்கும், அம்பாளுக்கும் உரியது. வெள்ளிக்கிழமையன்று சுக்ரனுக்கு விரதம் இருந்தால் சுபிட்சமான வாழ்வு உண்டாகும். கடன் தொல்லை நீங்கும்.துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட நல்லதே நடக்கும்.
சனிக்கிழமை:
சனிக்கிழமை அன்று வேங்கடேச பெருமளுக்கு விரதமிருந்து துளசி மாலை சாற்றிட வழிபட்டால் எல்லா வித சிறப்பும் வந்தடையும்.வீர அனுமனை விரதமிருந்து வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் காரிய வெற்றி உண்டாகும்......
🌸🌸🌸🌸🌸🌸
#புண்ணியம்_மிகுந்த
புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
குறிப்பாக புரட்டாசி என்றதுமே அனைவருக்கும் முதலில் திருப்பதி ஏழுமலையான் வழிபாடுதான் நினைவுக்கு வரும். அதனால்தான் புரட்டாசி மாதத்தை “பெருமாள் மாதம்” என்று சொல்கிறார்கள்.
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது. புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது. எனவே பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
புரட்டாசியில் சனிக்கிழமை விரதம் தவிர அனந்த விரதம், ஏகாதசி விரதம் உள்பட ஏராளமான விரதங்கள் உள்ளன. புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவபெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
அது போல அம்பாளுக்கு உகந்த நவராத்திரி 9 நாட்கள் வழிபாடும் புரட்டாசியில் வர உள்ளது. அதோடு லலிதா சஷ்டி விரதம், உமா மகேஸ்வரி விரதம், கேதார கவுரி விரதம் ஆகியவையும் அம்பாளுக்கு உகந்த புண்ணிய தினங்களாகும். புரட்டாசியில் வரும் தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய இரு விரதங்களும் விநாயகப் பெருமானுக்கு உரியவை யாகும். இந்த நாட்களில் விநாயகரை வழிபட்டால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.
இவை மட்டுமின்றி முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மகாளய பட்சமும் புரட்டாசி மாதம்தான் வருகிறது. மகாளயபட்ச நாட்களில் முன்னோருக்கு உரிய தர்ப்பணம் கொடுத்தால் பித்ருக்களின் ஆசியை முழுமையாக பெற முடியும். இப்படி தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
🌸🌸🌸🌸🌸
விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல.
உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன.
விரதம் என்பது மனம் அலையாமல் இருக்க, கண்ட கூத்துக்கள் ஆடாதிருக்க, ஆவேசப்படாதிருக்க, அசூயையோ ஆத்திரமோ ஏற்படாதிருக்க செய்யும் விஷயம்.
இவை ஏற்படின் விரதம் முடிந்து போனதாகவே அர்த்தம். ஆவேசப்படுகிற மனதை, அலைகிற மனதை அடக்கி நிறுத்தவே விரதம் என்கிற வைராக்கியம்..
அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து என்பது கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தையும் குறிக்கும்.
இந்த உறுப்புகள் ஒடுங்கும் போது, மனம் மோட்சத்தைத் தேடி, ஞானத்தை தேடி புறப்படுகிறது.
வறுமையால்உணவு இல்லை, சூழ்நிலை காரணமாக உணவில்லை என்ற நிலை வரும் போது கிடக்கும் பட்டினி விரதம் ஆகாது.
நம் கண்முன் பாலும், பழமும், இனிப்பும், சித்ரான்னங்களும், பிற வகை உணவுகளும் குவிந்து கிடக்கும்போது, மனதை அடக்கி பசித்திருக்கிறோமோ, அது தான் உண்மையான விரதம்.
இன்றைய உலகில், உணவுக்கட்டுப்பாடு பற்றி முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்துகிறார்கள்.
நமது வயிறு 15 நாட்களுக்கு ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும்.
அதனால் தான் அமாவாசை, பவுர்ணமி, வெள்ளி, சஷ்டி என்றெல்லாம் விரதங்களை வகுத்தார்கள்.
விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது. சுருங்கி விரியும் தன்மை சீராகிறது. மலஜலம் சரியாக வெளியேறுகிறது. ஆரோக்கியமாக வாழவே விரதங்களை நம் முன்னோர் வகுத்தனர்.
Comments
Post a Comment