ராமாயண_பாராயணம்

ராமாயண_பாராயணம்

*🔯 ஸ்ரீமத் ராமாயணத்திலுள்ள ஒவ்வொரு காண்டத்திலும் சிற்சில ஸர்க்கங்களை பாராயணம் செய்தால் ஒவ்வொரு காரியமும் சுலபமாக நிறைவேறும் என்று கூறப்பட்டுள்ளது.*

*🔯திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க '* பாலகாண்டத்தில் சீதா கல்யாணத்தை ' காலை, மாலை இரு வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.

*🔯குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை உண்டாக '* பாலகாண்டத்தில் புத்திர காமேஷ்டி பாயாஸதான பாராயண கட்டத்தை ' பாராயணம் செய்ய வேண்டும்.

*🔯சுகப்பிரசவத்திற்கு '* பாலகாண்டத்தில் ஸ்ரீ ராமாவதாரத்தை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

*🔯கெட்ட வழியில் செல்லும் பிள்ளை திருந்தி வாழ '* அயோத்யா காண்டத்தில் கௌசல்யா ராமா ஸம்வாதத்தை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

*🔯அரச காரியங்களில் வெற்றி கிட்ட '* அயோத்யா காண்டத்தில் ராஜதர்மங்களை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

*🔯ஏவல், பில்லி, பேய், பிசாசு நீங்க '* சுந்தர காண்டத்தில் லங்கா விஜயத்தை ' மாலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

*🔯பித்தம் தெளிய '* சுந்தர காண்டத்தில் ஹுனுமத் சிந்தையை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

*🔯தரித்திரம் நீங்க '* சுந்தர காண்டத்தில் சீதா தரிசனத்தை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

*🔯பிரிந்தவர் சேர '* சுந்தர காண்டத்தில் அங்குலீயக பிரதானத்தை ' காலை, மாலை இரு வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.

*🔯கெட்ட கனவுகள் வராமலிருக்க '* சுந்தர காண்டத்தில் திரிஜடை ஸ்வப்னத்தை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

*🔯தெய்வ குற்றம் நீங்க '* சுந்தர காண்டத்தில் காகாசுர விருத்தாந்தத்தை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

*🔯ஆபத்து நீங்க '* யுத்த காண்டத்தில் வீபிஷண சரணாகதியை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

*🔯சிறை பயம் நீங்க* ' யுத்த காண்டத்தில் வீபிஷணன் சீதையை ஸ்ரீ ராமரிடம் சேர்த்ததை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

*🔯மறு பிறவியில் சகல சுகம் பெற '* யுத்த காண்டத்தில் ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

*🔯குஷ்டம் போன்ற நோய்கள் தீர '* யுத்த காண்டத்தில் ராவண கிரீட பங்கத்தை ' காலை, மாலை இரு வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.

*🔯துன்பம் நீங்க"* யுத்த காண்டத்தில் சீதா ஆஞ்சநேய ஸம்வாதத்தை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

*🔯மோட்ச பலன் கிடைக்க '* ஆரண்ய காண்டத்தில் ஜடாயு மோட்சத்தை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

*🔯தொழிலில் இலாபம் அடைய"* அயோத்யா காண்டத்தில் யாத்ரா தானத்தை ' காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.

Comments

Popular posts from this blog

விரதங்கள்

நவக்கிரக 108 போற்றி

எந்த கடவுளை எப்படி வணங்க வேண்டும்